வணிகம்

மீன் இறக்குமதியை வரையறுக்க தீர்மானம்

(UTV|COLOMBO) மீன் இறக்குமதியை வரையறுப்பதற்கு கடற்றொழில் மற்றும் நீரியல்வள அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலீப் வெத ஆரச்சி தீர்மானித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் தேசிய கடற்றொழிலாளர்கள் மற்றும் கடற்றொழில் துறையைப் பாதுகாக்கும் வகையில் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

இதற்கமைவாக, செப்டெம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரையில் இந்த இறக்குமதியை வரையறுப்பதற்கு கடுமையான நடைமுறைகளை மேற்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

கடற்றொழிலாளர் சங்கம் உள்ளிட்ட கடற்றொழில் துறையில் ஈடுபட்டுள்ள பல்வேறு தரப்பினர் பல சந்தர்ப்பங்களில் இராஜாங்க அமைச்சரிடம் இது தொடர்பாகச் சுட்டிக்காட்டியிருந்தனர்.

பெருந்தொகையில் மீன் இறக்குமதி செய்யப்படுவதனால் பிரச்சினைகள் பல எதிர்நோக்கப்படுவதாக அவர்கள் குறிப்பிட்டுள்ளனர். மீன் ஏற்றுமதி மற்றும் பல்வேறு தயாரிப்புக்களுக்கெனக் கூறி பாரிய அளவில் மீன்கள் இறக்குமதி செய்யப்படுவதாகவும் அவை தேசிய சந்தையில் விற்பனை செய்யப்படுவதாகவும் பெரும்பாலான கடற்றொழில் வள்ளத்தின் உரிமையாளர்கள் சமீபத்தில் இராஜாங்க அமைச்சருடன் நடத்திய பேச்சுவார்த்தையில் சுட்டிக்காட்டியிருந்தனர்.

 

 

 

 

Related posts

இலங்கையின் தலைசிறந்த வங்கியாக கொமர்ஷல் வங்கி தெரிவு

ஆடை ஏற்றுமதி 500 மில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரிக்கும்

கற்றாளை உற்பத்தியை விஸ்தரிக்க நடவடிக்கை