வகைப்படுத்தப்படாத

மீண்டும் பெற்றோலுக்குத் தட்டுப்பாடா?

(UTV | COLOMBO) – நாட்டில் எரிபொருளுக்கு எந்தவிதமான தட்டுபாடும் இல்லை என்று கனிய வள அமைச்சின் செயலாளர் உப்பாலி மாரசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் தேவையற்ற பீதியை ஏற்படுத்தி கொள்ளவேண்டாம் என்றும் செயலாளர் கேட்டுகொண்டுள்ளார்.

 

நேற்று காலை முதல் கொழும்பு கண்டி உள்ளிட்ட பிரதேசங்களில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நீண்ட வரிசை காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

 

மேலும், போதிய எரிபொருள் கையிருப்பில் இல்லை என்ற வதந்தியும் நிலவியது. இது தொடர்பாகவே செயலாளர் இந்த விடயங்களை குறிப்பிட்டார்.

 

27ஆயிரத்து 497 மெற்றிக்தொன் ஓக்டேன் 92 ரக பெற்றோல் முத்துராஜவெல , கொலன்னாவ களஞ்சியசாலைகளில் இருப்பதாக அவர் தெரிவித்தார்.இது மாத்திரமன்றி நாடு முழுவதிலும் உள்ள 11 எரிபொருள் களஞ்சிய சாலைகளில் போதுமான எரிபொருள் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

 

நாட்டின் நாளாந்த பெற்றோல் தேவை 2500 முதல் 2700 மெற்றிக்தொன் ஆகும். எரிபொருளுக்கு தட்டுபாடு இருப்பதாக உண்மைக்குபுறம்பான வதந்தி பாரிய பிரச்சினையாக இருப்பதாக அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்தார்.

 

 

எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH                    கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள
REG<space>utv  என Type செய்து 77000 என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள்.

 

 

 

 

Related posts

இராணுவ ஜெனரல் மற்றும் பாதுகாப்பு படைப் பிரதானியாக பதவி உயர்வு

கேரள கஞ்சாவுடன் இருவர் கைது

Sivalingam fires Sri Lanka to 15th in Netball World Cup