உள்நாடு

மீண்டும் செயலிழந்தது ‘களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம்’

(UTV | கொழும்பு) – தேசிய மின் கட்டமைப்பிற்கு 280 மெகாவொட் மின்சாரத்தை விநியோகிக்கும் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தில் உள்ள இரண்டு மின்பிறப்பாக்கிகளும், எரிபொருள் இன்மையால் நேற்றிரவு முதல் செயலிழந்துள்ளன.

குறித்த மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு மின்பிறப்பாக்கியில் இருந்து 165 மெகாவொட் மின்சாரமும் மற்றுமொரு மின்பிறப்பாக்கியில் இருந்து 115 மெகாவொட் மின்சாரமும் தேசிய மின்கட்டமைப்புக்கு விநியோகிக்கப்படுகின்றது.

எரிபொருள் இன்மையால் செயலிழந்திருந்த சப்புகஸ்கந்த மற்றும் கொழும்பு துறைமுக மின்னுற்பத்தி நிலையங்களுக்கு அவசியமான எரிபொருள் தற்போது விநியோகிப்பதற்கான நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

இதுதவிர, தேசிய மின்கட்டமைப்புக்கு 130 மெகாவொட் மின்சாரத்தை விநியோகிக்கும் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையத்தின் ஒரு முனையத்தின் திருத்தப் பணிகள் இன்றைய தினத்துக்குள் நிறைவு செய்யப்படவுள்ளன.

பராமரிப்புப் பணிகள் காரணமாக நிறுத்தப்பட்ட நுரைச்சோலை மின்னுற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி இயந்திரம் தற்போது தேசிய மின் கட்டமைப்புடன் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

இன்று மற்றுமொரு தீர்மானத்திற்கு தயாராகும் அரசின் பங்காளிக்கட்சிகள்

பாராளுமன்ற கொத்தணி : மற்றுமொருவர் சிக்கினார்

கொவிட் சடலங்களை இரணைதீவில் அடக்கம் செய்ய எதிர்ப்பு [VIDEO]