உள்நாடுசூடான செய்திகள் 1

மீண்டும் குருணாகல் வைத்தியசாலையில் Dr.ஷாபி!

(UTV | கொழும்பு) –

‘குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்படவில்லை. வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் மீண்டும் குருணாகல் வைத்தியசாலையில்’ இணைத்துக் கொள்ளப்பட்டார்.’

இது தொடர்பில. டொக்டர் ஷாபி ஷிஹாப்தீன் அவர்களை சற்று நேரத்துக்கு முன்னர் நான் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டபோது. அவர் இவ்வாறு தெரிவுத்தார்.

‘ ஆம், கேள்விப்பட்டேன். ஆனால், சுகாதார அமைச்சிலிருந்து மீள்சேவை இணைப்புக் கடிதம் எனக்கு அனுப்பப்படவில்லை. அவ்வாறு அறிவுறுத்தல் கடிதம் கிடைத்தால் இன்ஷா அல்லாஹ் குருணாகல் வைத்தியசாலைக்குச் செல்ல தயாராகவுள்ளேன்’ என்றார்.

வைத்தியர் ஷாபி ஷிஹாப்தீன் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகளை நிறுத்தவும் மற்றும் அவரை மீண்டும் குருநாகல் வைத்தியசாலையில் மீண்டும் சேவையில் இணைக்க ஏற்பாடு செய்ய, பொது சேவை ஆணைக்குழு சுகாதார சேவைகள் குழு சுகாதார செயலாளருக்கு அறிவித்துள்ளது. (கடிதம் இணைப்பு)

சித்தீக் காரியப்பர்-

Utv

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

தபால் பரிவர்த்தனை நிலையத்தை மீண்டும் திறக்க தீர்மானம்

உண்மைக்குப் புறம்பான செய்திகள் – பாராளுமன்றத்திற்கும் நாட்டிற்கும் அபகீர்த்தி

பிரதமரின் அழைப்பை நிராகரித்தது ஐ.தே.க