அரசியல்உள்நாடு

மீண்டும் இந்தியாவுக்கு விஜயம் செய்கிறார் முன்னாள் ஜனாதிபதி ரணில்

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 22ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ள இருக்கிறார். அவர் இரண்டு மாதங்களுக்குள் இந்தியாவுக்கு பயணிப்பது இரண்டாவது தடவையாகும்.

ரணில் விக்ரமசிங்கவின் இந்தமுறை இந்தியா பயணத்தின்போது பல விசேட சந்திப்புக்களை நடத்தவுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரியவருகிறது.

இதற்கு மேலதிகமாக அவர் எதிர்வரும் 27ஆம் திகதி அடல் பிகார் வாஜ்பாய் நினைவு பேருரையையும் நிகழ்த்தவுள்ளார்.

அத்துடன் இந்தமுறை இந்திய விஜயத்தின்போது ரணில் விக்ரமசிங்க அங்கு ஒரு வாரத்துக்கும் அதிக காலம் தங்கி இருப்பார் என தெரியவருகிறது.

இந்த பயணத்தின்போது அவர் இந்தியாவின் புராதன இடங்களை கண்டுகளிப்பதற்காக அதிக காலத்தை ஒதுக்கி இருப்பதாக தெரியவருகிறது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த நவம்பர் மாதம் 21ஆம் திகதி முதல் 30ஆம் திகதிவரை இந்தியாவுக்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

-எம்.ஆர்.எம்.வசீம்

Related posts

யாழ் ஆயரின் புதுவருட வாழ்த்து செய்தி!

வவுனியா சம்பவம்: இளம் பெண்ணின் கணவரும் பலி!

‘அரபு நாடுகளின் நண்பனாகக் கூறும் இந்த அரசு, புர்காவை தடைசெய்து இனவாதிகளுக்கு இனிப்பூட்டுகிறது’