உள்நாடு

மிலேனியம் சிட்டி வழக்கிலிருந்து முன்னாள் ASP குலசிறி உடுகம்பொல விடுவிப்பு

2002 ஆம் ஆண்டு அத்துருகிரியவில் உள்ள “மிலேனியம் சிட்டி” வீட்டுத் திட்டம் அமைந்துள்ள இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவால் பராமரிக்கப்பட்டு வந்த பாதுகாப்பான இல்லம் பற்றிய தகவல்களைப் பகிரங்கப்படுத்தியதன் மூலம் தேசிய பாதுகாப்புக்கு ஆபத்தை விளைவித்ததாகக் கூறி, கண்டி முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குலசிறி உடுகம்பொல மீது சாட்டப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை விடுவித்து கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சுமார் இருபது வருடங்களாக நீடித்த நீண்ட விசாரணைக்குப் பிறகு கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்யா பட்டபெந்திகே இந்த தீர்ப்பை அறிவித்தார்.

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி அன்று அத்துருகிரியவில் உள்ள “மிலேனியம் சிட்டி” வீட்டு திட்டத்தில் பராமரிக்கப்பட்டு வந்த இலங்கை இராணுவத்தின் புலனாய்வுப் பிரிவுக்குச் சொந்தமான ஒரு பாதுகாப்பு இல்லத்தை சோதனையிட்டு, இராணுவ புலனாய்வு அதிகாரிகள் மற்றும் அவர்களின் நடவடிக்கைகள் குறித்த தகவல்களைப் பகிரங்கப்படுத்தியதன் மூலம், நாட்டின் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பை பாதிக்கும் வகையில் செயல்பட்டதன் ஊடாக அதிகாரப்பூர்வ ரகசியச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டிய, கண்டி முன்னாள் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் குலசிறி உடுகம்பொலவுக்கு எதிராக சட்டமா அதிபர் இந்தக் குற்றப்பத்திரிகியை தாக்கல் செய்திருந்தார்.

Related posts

பாகிஸ்தான் அணி 4 விக்கெட்டுக்களால் வெற்றி!

இன்றும் மழை

தேங்காய்க்கு தட்டுப்பாடு – தேங்காய் ஒன்றின் விலை 200 ரூபா வரையில் உயர்ந்துள்ளது

editor