உலகம்

மியான்மரில் நிலநடுக்கம் – ரிக்டரில் 4.8 ஆக பதிவு

மியான்மரில் இன்று (24) அதிகாலை 12.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

மியான்மர் நாட்டில், இந்தியாவின் மணிப்பூர் எல்லையையொட்டிய பகுதியில் இன்று அதிகாலை 12.53 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.

இது ரிக்டர் அளவுகோலில் 4.8 ஆக பதிவாகி இருந்தது.

இந்நிலநடுக்கம் 106 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்தது என தேசிய நிலநடுக்க அறிவியல் மையம் தெரிவித்து உள்ளது.

இதனால் ஏற்பட்ட பொருளிழப்புகள் உள்ளிட்ட விவரங்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை.

Related posts

ஒக்ஸ்போர்டு / அஸ்ட்ராஜெனெகா தடுப்பூசி செலுத்தும் திட்டங்களை தென்னாபிரிக்கா நிறுத்தியது

ஹாங்காங் சட்டசபை தேர்தல் ஒத்திவைப்புக்கு அமெரிக்கா கண்டனம்

மீண்டும் மன்னிப்பு கோரிய FB நிறுவனம்