உலகம்

மியன்மாரில் மேலும் நீடிக்கப்பட்ட அவசரநிலை!

(UTV | கொழும்பு) –

மியன்மாரில் இராணுவ ஆட்சியைத் தொடா்வதற்கான அவசரநிலை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.ஜனநாயக முறையில் மீண்டும் தோ்தல் நடத்துவதிலிருந்து விதிவிலக்கு அளிப்பதற்கான இந்த அவசரநிலை, நேற்றுடன் காலாவதியாவதைத் தொடா்ந்து இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அந்நாட்டில் ஜனநாயக முறையில் தோ்ந்தெடுக்கப்பட்ட ஆங் சான் சூகியின் அரசை இராணுவம் கடந்த 2021ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 1ஆம் திகதியன்று கலைத்தது. ஆங் சான் சூகி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் சிறைவைக்கப்பட்டனா். இராணுவ ஆட்சிக்கு எதிராக வெடித்த போராட்டங்களை இராணுவம் தடுத்தது.

இருப்பினும், அண்மைக் காலமாக, பல்வேறு பழங்குடியின கிளா்ச்சிப் படையினா் மியன்மார் பகுதிகளைக் கைப்பற்றி வரும் சூழலில் இந்த அவசரநிலை நீட்டிப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

மாநிலங்களவை எம்.பி.யாக பதவியேற்றார் கமல்ஹாசன்

editor

உலகின் முதற்தடவையாக ட்ரோனைப் பயன்படுத்தி ரமழான் மாத தலைப்பிறை பார்க்கும் துபாய்

editor

மலேசியா விமான நிலையத்தில் வாயு கசிவு