வகைப்படுத்தப்படாத

மியன்மாரின் நாடாளுமன்றத்தை உறுதிபடுத்துவதற்கு இலங்கை உதவ வேண்டும்

(UDHAYAM, COLOMBO) – மியன்மாரின் ஜனநாயகத்தையும் அரச பரிபாலனத்தையும் நிலை நிறுத்தி நாடாளுமன்றத்தை உறுதிபடுத்துவதற்கு இலங்கை உதவ வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சீனாவில் இடம்பெறும் மாநாடொன்றில் கலந்து கொள்ள இலங்கை பிரதமர் ரணில் விக்கரமசிங்க சீனா சென்றுள்ளார்.

இந்தநிலையில், மியன்மாரின் அரச தலைவியான ஆங் செங் சூகிக்கும் பிரதமர் ரணில் விக்கரமசிங்கவுக்கும் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பின் போது ஆங் செங் சூகி இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.

இதேவேளை, மியர்மாரில் நிலையான அரசியலை ஸ்தாபிப்பதே அந்த நாட்டின் பிரதான சவாலாக அமைந்துள்ளதாகவும் ஆங் செங் சூகி குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பிரதமர் ரணில் விக்கரமசிங்கவினால், ஆங் செங் சூகிக்கு இலங்கைகான விஜயம் ஒன்றை மேற்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒத்திவைப்பு?

Supreme Council of the Muslim Congress to convene today

மண்ணெண்ணெய்யை மொத்த விற்பனை செய்யத்தடை