உள்நாடு

மின் கட்டணம் உயர்த்தப்படுமா? – இன்று இறுதி தீர்மானம்.

(UTV | கொழும்பு) – மின் கட்டணம் உயர்த்தப்படுமா? – இன்று இறுதி தீர்மானம்.
இன்று (09) நடைபெறவுள்ள அமைச்சரவை கூட்டத்தில் மின் கட்டண உயர்வு குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம் ஜனாதிபதி தலைமையில் கூடிய அமைச்சரவையில் மீண்டும் மின் கட்டணத்தை உயர்த்துவதற்கான யோசனை முன்வைக்கப்பட்டிருந்தது.

இதனையடுத்து, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு உள்ளிட்ட பல தரப்பினரும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்த நிலையிலேயே இது தொடர்பான பிரேரணை அமைச்சரவையில் முன்வைக்கப்பட்டது.

இருப்பினும், கடந்த வாரம் அமைச்சரவையில் முன்வைக்கப்பட்ட இந்த பிரேரணை, மேலதிக ஆய்வு செய்து முடிவெடுப்பதற்காக இன்று (9) வரை ஒத்திவைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வவுனியா சம்பவம்: இளம் பெண்ணின் கணவரும் பலி!

கொழும்பில் குழப்பநிலை – மக்கள் மீது பொலிஸார் கண்ணீர்ப்புகை பிரயோகம்

LAUGHS மற்றும் LITRO எரிவாயு நிறுவனங்களுக்கு நீதிமன்றம் உத்தரவு