உள்நாடு

மின்வெட்டு குறித்து நாளை பரிசீலனை

(UTV | கொழும்பு) – இலங்கை மின்சார சபையினால் மின்வெட்டு தொடர்பில் முன்வைக்கப்பட்ட யோசனையை மீண்டும் நாளை 27 ஆம் திகதி பரிசீலிப்பதற்கும் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இது தொடர்பில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க மேலும் தெரிவித்ததாவது,

“.. மின்சாரம் தயாரிக்க போதுமான எரிபொருள் கையிருப்பு நாளை 27ஆம் திகதி வரை உள்ளமையால் நாளை வரையில் மின் வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது.

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்துக்கு தற்போதுள்ள எரிபொருட்களின் இருப்புக்கள் தொடர்பாகவும் அவற்றை மின் உற்பத்தி நிலையங்களுக்கு வழங்கக்கூடிய திகதிகள் பற்றிய தகவல்களை வழங்குமாறு கோரப்பட்டுள்ளது.

இம்மாத இறுதிக்குள் இலங்கைக்கு கச்சா எண்ணெய் கையிருப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன் பிறகு எரிபொருள் மற்றும் நாப்தா மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும். மின் உற்பத்தி நிலையங்களுக்கு தேவையான எரிபொருளைப் பெற்றுக்கொள்ள முடியும் என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதேவேளை, புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வரும் நுரைச்சோலை அனல்மின் நிலையத்தின் 3ஆம் அலகு இம்மாத இறுதிக்குள் மீண்டும் மின் உற்பத்தியை ஆரம்பிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன்படி, தடையற்ற மின்சார விநியோகத்தை வழங்க முடியும் என ஆணைக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

மேலும், நிலக்கரி மற்றும் பிற எரிபொருட்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான அந்நிய செலாவணியை எவ்வாறு கண்டுபிடிப்பது என்பது குறித்து இலங்கை மத்திய வங்கியின் ஆளுநருடன் கலந்துரையாடினோம். எதிர்காலத்தில் இந்த அன்னியச் செலாவணி பிரச்சினையும் தீர்க்கப்படும் என நம்புகிறோம்..” எனத் தெரிவித்திருந்தார்.

Related posts

துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலி

உண்ணாவிரத போராட்டத்தில் இருந்து விலகிய 25 கைதிகள்

தபால் மூல வாக்காளர்களுக்கான முக்கிய அறிவிப்பு