உள்நாடு

மின்சார வேலியில் சிக்கி இருவர் பலி

(UTV | கொழும்பு) –  மட்டக்களப்பு குடும்பிமலை பிரதேசத்தில் பண்ணை ஒன்றில் சட்டவிரேதமாக அமைக்கப்பட்ட மின்சார வேலியில் மின்சாரம் தாக்கி இரு விவசாயிகள் உயிரிழந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை (13) சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர்.

குடும்பிமலையைச் சேர்ந்த 51 வயதுடைய ஆறுமுகம் லோகநாதன், பலிபாய்ந்தகல் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய விநாயகமூர்த்தி சுதர்சன் ஆகிய இருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது..

வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள குடும்பிமலை ஈச்சையடி பகுதியில் முன்னாள் பிரதி அமைச்சர் ஒருவருக்கு சொந்தமான பண்ணையை வாழைச்சேனையைச் சேர்ந்த நபர் ஒருவர் குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவரும் நிலையில் காட்டு விலங்குகள் உள்நுழைவதை தடுப்பதற்காக சட்டவிரோதமாக மின்சாரத்தை பெற்று பண்ணையை சுற்றி மின்சார வேலி அமைத்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த பண்னைக்கு அருகில் வேளாண்மை அறுவடைக்கு சென்று மாமனாரும் மருமகனும் நேற்றைய தினம் சென்றுள்ள நிலையில் சம்பவதினமான இன்று காலை பணனைக்கு சென்ற உரிமையாளர் மின்சார வேலியில் மின்சாரம் தாக்கி இருவர் உயிரிழந்துள்ளதை கண்டு பொலிசாருக்கு தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பொலிசார் நீதிமன்ற உத்தரவை பெற்று சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு ஒப்படைப்பதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்துவருவதாக பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

நாளை பல பகுதிகளில் நீர் விநியோகம் தடை

இலசவ Wi-Fi குறித்து பொது மக்களுக்கு எச்சரிக்கை

editor

மியன்மாரிலிருந்து 20,000 மெட்ரிக் டன் அரிசியை இறக்குமதி செய்ய தீர்மானம்