உள்நாடு

மின்சாரக் கட்டணத்தை அதிகரிக்கும் மின்சார சபையின் கோரிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது

(UTV | கொழும்பு) – கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபை முன்வைத்த கோரிக்கை அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தித் திட்டங்களை CEB ஆதரிக்காததால் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக அவர் ட்விட்டர் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தமது சொந்த சம்பளத்தை செலுத்துவதற்காக கட்டணத்தை அதிகரிப்பதை விட, புதுப்பிக்கத்தக்க திட்டங்களை முன்னெடுக்கவும், மின்சார உற்பத்தி செலவை குறைக்கவும் இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட வேண்டுமென அவர் சுட்டிக்காட்டினார்.

மூன்று வருடங்களுக்கு ஒருமுறை 25% சம்பளத்தை அதிகரிப்பதற்கு இலங்கை மின்சார சபை கூட்டு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அல்லது மின்சாரச் செலவைக் குறைக்கும் திட்டம் ஏதுமின்றி, அதிக ஊதியம் மற்றும் உற்பத்திச் செலவுகள் நுகர்வோர் மீது செலுத்தப்படும் என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இந்த முறை மாற்றப்பட வேண்டும் என அமைச்சர் வலியுறுத்தினார்.

Related posts

மின்சாரத்தை துண்டிக்க மாட்டோம் – இலங்கை மின்சார சபை

நட்டஈடு கோரும் சேதன உரம் அனுப்பிய சீன நிறுவனம்

பாடசாலைகள் ஆரம்பிக்கும் திகதி அறிவிப்பு