கேளிக்கை

‘மாஸ்டர்’ ட்ரெய்லர் வெளியீட்டு திகதி

(UTVNEWS | இந்தியா ) –தளபதி விஜய் நடிப்பில் தயாராகி இருக்கும் ‘மாஸ்டர்’ படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் மாஸ்டர் படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.

இந்த படத்தில் விஜயுடன் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், சாந்தனு, ஆண்ட்ரியா, ரம்யா, கௌரி கிஷன், தீனா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அனிரூத் இசையமைத்திருக்கிறார்.

.இப்படத்தின் இசை வெளியீடு நேற்று நடைபெற்றது. இசை வெளியீட்டு விழாவில் பேசிய இயக்குநர் லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் படத்தின் ட்ரெய்லர் வரும் 22 ஆம் திகதி வெளியிடப்படும் என தெரிவித்தார்.

Related posts

பிரபல நடிகைக்கு பெண் குழந்தை

சிம்பு இனி படங்களில் நடிக்க கூடாது!

Coming Soon