அரசியல்உள்நாடு

மாலைதீவு மற்றும் இலங்கை இடையே கூட்டு சுற்றுலா திட்டத்தை செயல்படுத்துவதில் கவனம்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் மாலைதீவு குடியரசின் உயர்ஸ்தானிகர் மசூத் இமாட்(Masood Imad) அவர்களுக்கும் இடையில் இன்று (25) ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற சந்திப்பின் போது இது குறித்து கலந்துரையாடப்பட்டது.

கடந்த தேர்தல்களில் ஜனாதிபதி தலைமையிலான தற்போதைய அரசாங்கம் அடைந்த வெற்றிகளுக்கு மாலைதீவு குடியரசின் வாழ்த்துகளைத் தெரிவித்த உயர் ஸ்தானிகர், தேர்தல் வெற்றியைத் தொடர்ந்து நாட்டில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்கள் குறித்து மகிழ்ச்சியையும் தெரிவித்தார்.

மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையேயான 60 ஆண்டுகால நட்பை வலுப்படுத்தி, தொடர்ந்து பேணுவது குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டன.

இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் வலுப்படுத்துவதில் மாலைதீவு ஆற்றும் சிறப்பான பங்களிப்பிற்கு ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தனது பாராட்டுகளைத் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரோஷன் கமகே, மாலைதீவு குடியரசின் வெளியுறவு செயலாளர் பாத்திமத் இனாயா(Fathimath Inaya),இரண்டாம் செயலாளர் அமினாத் அப்துல்லா தீதி (Aminath Abdulla didi)உள்ளிட்ட பலர் இச்சந்திப்பில் கலந்து கொண்டனர்.

-ஜனாதிபதி ஊடகப் பிரிவு

Related posts

72 தொழிற்சங்கங்கள் நாளை தொழிற்சங்க நடவடிக்கை!

பேரீச்சம் பழ விடுவிப்பில் அசௌகரியம் – சவூதியிடம் மன்னிப்புக் கோரிய இலங்கை

editor

பொதுத்தேர்தல் தொடர்பில் விசேட கலந்துரையாடல்