உலகம்

மாடர்னா தடுப்பு மருந்துக்கு அமெரிக்கா அனுமதி

(UTV | அமெரிக்கா) –  மாடர்னா கொரோனா வைரஸ் தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு அமெரிக்க அரசாங்கம் அனுமதியளித்துள்ளது.

இதன்படி நாட்டின் இரண்டாவது கொரோனா வைரஸ் தடுப்பூசியாக மாடர்னா அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக அமெரிக்க அரசாங்கம் தெரிவித்துள்ளது.

மாடர்னா தடுப்பு மருந்து அனுமதியை பெற்றுள்ளதால் மேலும் பல கோடி அமெரிக்க மக்களுக்கு கொரோனா வைரஸ் தடுப்பூசி பெறுவதற்கான வாய்ப்பு கிடைத்துள்ளது.

மாடர்னா தடுப்பூசிக்கு அனுமதி வழங்குமாறு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திற்கு ஆலோசனை வழங்கும் மருத்துவ நிபுணர்கள் குழுவினால் பரிந்துரை முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

மாடர்னா தடுப்பு மருந்தின் 20 கோடி டோஸ்களை வாங்க அமெரிக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது. அவற்றில் சுமார் 60 லட்சம் டோஸ்கள் தற்போது விநியோகத்துக்கு தயாராக இருப்பதாக கருதப்படுகிறது.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொரோனா உலகில் மிகவும் ஆபத்தான உயிர்கொல்லி வைரஸ் தொற்று – உலக சுகாதார அமைப்பு

கஷோகி கொலையாளிகள் 5வருக்கு மரண தண்டனை

அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி