சூடான செய்திகள் 1

மாகாண சபைத் தேர்தல் செப்டம்பர் 30ம் திகதிக்கு முன்னர்

(UTVNEWS | COLOMBO) – மாகாண சபைத் தேர்தல் ஆகக் குறைந்தது எதிர்வரும் செப்டம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு முன்னர் நடத்தப்பட வேண்டும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை நடத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்வதன் காரணமாக, ஜனாதிபதி தேர்தலை உரிய காலத்தில் நடத்துவதில் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மாகாண சபைத் தேர்தலை முன்னதாக நடத்துவதனால் ஜனாதிபதித் தேர்தல் எந்தவொரு காரணத்திற்காகவும் பிற்போகாது.

சட்டரீதியான தடங்கல்களின் காரணமாக மாகாண சபைத் தேர்தல் காலம் தாழ்த்தப்பட்டுள்ளதாக அவர் மேலும் சுட்டிக்காட்டியிருந்தார்.

Related posts

நாட்டின் பல பிரதேசங்களில் பண மோசடி செய்தவர் கைது

“நாட்டுக்காக ஒன்றுபடுவோம்” அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு எதிர்வரும் 18ம் திகதி

நாடு முழுவதும் பலத்த காற்று வீசக் கூடும்