சூடான செய்திகள் 1

மஹிந்த சுதந்திரக் கட்சி உறுப்பினர் – உத்தியோகபூர்வ அறிவிப்பு

(UTV|COLOMBO)-மஹிந்த ராஜபக்ஷ தொடர்ந்தும் தமது கட்சியின் உறுப்பினர் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி இன்று உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.

இதுதொடர்பான உறுதிப்படுத்தல் கடிதத்தை சபாநாயகரிடம் சுதந்திரக்கட்சி கையளித்துள்ளது.

அதேவேளை எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற வாதப் பிரதிவாதங்கள் பாராளுமன்றில் இடம்பெற்றுவரும் நிலையிலேயே சுதந்திரக் கட்சியின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளன.

இதன்மூலம் மஹிந்த ராஜபக்‌ஷவின் எதிர்க்கட்சித் தலைவர் உறுதியாவதாக சுதந்திரக் கட்சி குறிப்பிட்டுள்ளது.

எவ்வாறாயினும் சபாநாயகர் தன்னை எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலிருந்து இதுவரை நீக்கவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்மந்தன் இன்று கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

குழந்தைக்கு மதுபானம் கொடுத்த தந்தை உட்பட நால்வர் கைது !

விமான நிலையத்திற்கு செல்ல அனுமதி மறுப்பு

சாரதி அனுமதிப்பத்திரத்தின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு