உள்நாடு

மஹிந்தானந்தவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை

(UTV | கொழும்பு) – விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவருவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்துள்ளதாக அதன் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

உரம் வழங்கல் தொடர்பில் அரசாங்கத்தினால் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

இந்தப் பிரச்சினை இவ்வாறு நீடிக்கப்பட்டால் அது உற்பத்திகளில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும்.

எனவே அடுத்த வாரத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடி விவசாய அமைச்சருக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என திஸ்ஸ அத்தநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

Related posts

ரிஷாட் எம்.பி யின் முயற்சியில் 7 கோடி ரூபா செலவில் அமைக்கப்படும் பாடசாலைக் கட்டிடம் | வீடியோ

editor

180 நாட்கள் பணிபுரியும் ஒவ்வொரு ஊழியருக்கும் அரை மாத பணிக்கொடை : அமைச்சர்  மனுஷ

சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி