உள்நாடுவகைப்படுத்தப்படாதவிளையாட்டு

மஹிந்தானந்தவின் கருத்தானது பாரதூரமானது : நாமலிடம் இருந்து Twitter பதிவு

(UTV | கொழும்பு) – 2011ம் ஆண்டு இந்தியாவில் இடம்பெற்ற ஒருநாள் உலகக் கிண்ண போட்டியின் இறுதிப் போட்டியின் போது இடம்பெற்ற ஆட்ட நிர்ணயம் தொடர்பில் முன்னாள் அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்த குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமானது என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கிரிக்கெட் போட்டியென்பது அனைவராலும் விரும்பப்பட்ட ஒரு போட்டியாகும் அவ்வாறானதொரு போட்டியின் தன்மையினை இவ்வாறான கருத்துக்கள் தாக்குவது என்பது ஏற்றுக் கொள்ள முடியாததொன்றாகும்.

மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்த கருத்து தொடர்பில் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் தளத்தில் நாமல் ராஜபக்ஷ இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், குறித்த குற்றச்சாட்டு தொடர்பில் ஐ.சி.சி. மற்றும் விளையாட்டு அமைச்சர் உரிய நடவடிக்கையினை எடுக்க வேண்டும் என்பதோடு, பக்கசார்பற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர் தனது பதிவில் தெரிவித்துள்ளார்.

Related posts

வீடியோ | நாமல் எம்.பியில் சட்டத்தரணி பட்டம் போலியா?உண்மையை அம்பலப்படுத்திய அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ

editor

கலா ஓயா வெள்ள அபாய எச்சரிக்கை நீடிப்பு

editor

இலங்கை சுகாதாரத் துறையின் முன்னேற்றத்திற்கு இந்தோனேசியா ஆதரவு

editor