சூடான செய்திகள் 1

மழையுடனான காலநிலை தொடரும்

(UTV|COLOMBO)-நாட்டை சூழவுள்ள தாழ்வான வளி மண்டளத்தில் ஏற்பட்டுள் குழப்பநிலை காரணமாக, மழையுடனான காலநிலை எதிர்வரும் சில நாட்களுக்கு தொடரும் என வளி மண்டளவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அந்த திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதற்கமைய இன்றைய தினம் மத்திய, சம்பரகமுவ, ஊவா, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் 100 மில்லிமீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகும் எனவும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

வடக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் இருந்து வீசும் காற்று காரணமாக இலங்கை வான்பரப்பை அண்டி தாழமுக்கம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, வளிமண்டளத்தில் குழப்பநிலை ஏற்பட்டுள்ளதால், நாடு முழுவதிலும் மழையுடனான காலநிலை நிலவும் என தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இன்று காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில், அதிகளவிலான மழை வீச்சி கொழும்பு – கோட்டை பிரதேசத்தில் பதிவாகியுள்ளதாகவும் காலநிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

எட்டம்பிட்டிய காட்டுப் பகுதியில் தீப்பரவல்

இன்றிலிருந்து அலுகோசு பதவிக்கான விண்ணப்பங்கள் பரிசீலனை ஆரம்பம்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் மேலும் ஐவர் கைது