உள்நாடு

மழையுடனான காலநிலை அடுத்த சில நாட்களுக்கு நீடிக்கும்

(UTV | கொழும்பு) – நாட்டில் தென்மேற்கு பருவப் பெயர்ச்சி மழை நிலைமை உருவாகியுள்ளதாக தேசிய வளிமண்டலவியல் நிலையம் அறிவித்துள்ளது.

அத்துடன், நாட்டின்தென்மேற்கு பகுதியில் தற்போது காணப்படும் மழை நிலை அடுத்த சில நாட்களுக்கும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், வடமேல், சப்ரகமுவ மற்றும் மத்திய மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

மேல், வடமேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ க்கும் அதிகமான ஓரளவு பலத்த மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடு முழுவதும் குறிப்பாக மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரை அதிகரிக்கக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுக் கூட்டம் இன்று

மேலும் 08 கடற்படை உறுப்பினர்கள் பூரண குணம்

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் ஏற்பாட்டில் இந்தியாவில் இருந்து ஆதீனங்கள் இலங்கைக்கு வருகை!