சூடான செய்திகள் 1

மலேரியாவுக்கான உலகின் முதல் தடுப்பூசியை பரிசோதனை இன்று

(UTVNEWS | COLOMBO) – மலேரியாவுக்கான உலகின் முதல் தடுப்பூசியை பரிசோதிக்கும் வேலைத்திட்டம் இன்று(13) கென்யாவில் முன்னெடுக்கப்படவுள்ளது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ் எதிர்வரும் 3 வருடங்களில் சுமார் 3 இலட்சம் பிள்ளைகளுக்கு தடுப்பூசி ஏற்றப்படவுள்ளது. மலேரியாவினால் உலகில் ஒரு வருடத்திற்கு சுமார் 4 இலட்சம் பேர் உயிரிழப்பதாகவும் அதில் அதிகமானோர் சிறுவர்கள் எனவும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

இந்நோயிற்கான தடுப்பூசியை கண்டுப்பிடிக்க சுமார் 30 ஆண்டுகள் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்த திட்டம் வெற்றியளித்தால் உலகில் இருந்து மலேரியாவை முற்றாக ஒழித்துவிட முடியுமென உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

Related posts

உலக தலசீமியா தினம் இன்று

‘Batticaloa Campus’ தொடர்பில் கோப் குழு விசாரணைகளை முன்னெடுக்க தீர்மானம்

புத்தளம் மாவட்டத்தில் ஆகக்கூடிய மரமுந்திரிகை அறுவடை…