வகைப்படுத்தப்படாத

மலேசிய முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் கைது

(UTV|MALAYSIA)-மலேசியா நாட்டில் சமீபத்தில் பாராளுமன்ற தேர்தல் நடந்தது. இதில், 60 ஆண்டுகளாக ஆளும் கட்சியாக இருந்து வந்த பாரீசன் தேசிய கட்சி தோற்கடிக்கப்பட்டது. பிரதமர் நஜீப் ரசாக் பதவி இழந்தார்.

அதே நேரத்தில் முன்னாள் பிரதமர் மகாதீர் முகமது அமைத்த கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து மகாதீர் முகமது பிரதமர் ஆனார்.

தேர்தலின் போதே அப்போதைய பிரதமர் நஜீப் ரசாக் மீது வங்கி முறைகேடு உள்ளிட்ட பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டன.

இப்போது இது சம்பந்தமாக விசாரணை நடந்து வருவதாக பிரதமர் மகாதீர் முகமது கூறி இருக்கிறார். மேலும் முன்னாள் பிரதமர் நஜீப் ரசாக் மீது குற்றச்சாட்டு பதிவு செய்ய வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கைது செய்யப்படும் சூழ்நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் பிரதமர் மகாதீர் முகமது கூறினார்.

எனவே, ஊழல் குற்றச்சாட்டில் நஜீப் ரசாக் எந்த நேரத்திலும் கைது செய்யப்படலாம் என்ற எதிர்பார்ப்பு மலேசியாவில் நிலவுகிறது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

காத்தான்குடியில்நல்லாட்சிக்கான தேசிய முன்னணியின் தலைமை அலுவலகம் மீது வெடிகுண்டு வீச்சு

FaceApp එකෙන් වයසට ගිය අයට අනතුරු ඇඟවීමක්

Nine Iranians arrested in Southern seas remanded