உலகம்

மலேசியாவின் புதிய பிரதமராக முஹைதீன் யாசின் நியமனம்

(UTV|மலேசியா)- மலேசியா பிரதமர் மகாதீர் முகம்மது பதவி விலகியதைத் தொடர்ந்து, முஹைதீன் யாசினை (Muhyiddin Yassin) புதிய பிரதமராக அந்நாட்டின் மன்னர் நியமித்துள்ளார்.

பிரதமர் மகாதீர் முகமது, தான் பதவி விலகுவதாக அறிவித்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தை மலேசிய மன்னருக்கு அனுப்பி வைத்தார்.

இந்நிலையில், மலேசியா மன்னர் சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷா, அனுபவமுள்ள அரசியல்வாதி முஹைதீன் யாசினை புதிய பிரதமராக நியமித்துள்ளார்.

நாளை, மார்ச் முதலாம் திகதி 72 வயதாகும் மொகிதின் யாசின் மலேசியாவின் எட்டாவது பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

Related posts

ரஷ்யாவில் சேவையை நிறுத்தியது Visa,MasterCard நிறுவனங்கள்

ஆப்கானிஸ்தானில் தாலிபானின் இடைக்கால அமைச்சரவை

இஸ்ரேல் – ஹிஸ்புல்லா போர் தீவிரம் – அவசர நிலையை அறிவித்த இஸ்ரேல்

editor