உள்நாடு

மற்றுமொரு கோர விபத்து – 8 பேர் படுகாயம்

(UTV | கொழும்பு) –

திருகோணமலை – சேருநுவர பொலிஸ் பிரிவிலுள்ள தங்கநகர் பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 8 நபர்கள் படுகாயமடைந்த நிலையில் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர்.

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் நேற்று மாலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவிசாலையிலிருந்து திருகோணமலைக்கு வேனில் சுற்றுலா வந்தவர்கள் சுற்றுலாவை முடித்துக் கொண்டு திரும்பிச் சென்று வேளை, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் ரக லொறியின் பின்னால் மோதுண்டதில் இவ்விபத்துச் சம்பவம் நேர்ந்துள்ளது.

இதன்போது வேனில் பயணித்த அவிசாவளையைச் சேர்ந்த வேன் சாரதி உற்பட 07 பேர் படுகாயமடைந்துள்ளதுடன் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கெப் ரக லொறியின் உதவியாளர் ஒருவரும் படுகாயங்களுக்குள்ளாகியுள்ளனர். இச்சம்பவத்தில் படுகாயமடைந்தவர்கள் மூதூர் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதுடன் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை சேருநுவர பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.

 

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

வெளிவிவகார அமைச்சர் நியூயோர்க்கில் ஐ.நாடுகள் பொதுச் சபை அமர்வில்

“முதலாவது சொத்துக்கு வருமானம் ஈட்டுவோர் உத்தேச வாடகை வரியில் இருந்து விடுவிக்கப்படுவர்”

மேலும் 08 கடற்படை உறுப்பினர்கள் குணமடைந்தனர்