உள்நாடு

மறு அறிவித்தல் வரை தென்கிழக்கு பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகள் அனைத்தும் ONLINE யில்.!

(UTV | கொழும்பு) –

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் பாதிப்புற்ற தென் கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாக சுத்திகரிப்பு பணிகள் இடம்பெற்று வருகிற சூழ்நிலையில் தொடர்ச்சியாக நிலவி வரும் காலநிலை சீரின்மை காரணமாகவும் மாணவர்கள் நலன் கருதியும் தென்கிழக்கு பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தின் அனைத்து கல்வி நடவடிக்கைகளையும் எதிர்வரும் 22.01.2024 தொடக்கம் நிகழ்நிலை (ஒன்லைன்) மூலமாக நடைபெற ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக பதில் பதிவாளர் எம்.ஐ.நௌபர் அவர்கள் தெரிவித்துள்ளார்.
வெள்ளப்பெருக்கின் காரணமாக ஏற்பட்ட சிதைவுகள் அகற்றப்பட்டு சுத்தம் செய்யப்படுவதாகவும் மறுசீரமைப்பு பணிகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் இவ்வாறான சூழல் மாணவர்களுக்கு சுகாதார ரீதியான பாதிப்புகளையும் அசௌகரியங்களையும் ஏற்படுத்தலாம் என்ற காரணத்தினாலேயே மேற்படி தீர்மானத்துக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை சம்மாந்துறையில் அமைந்துள்ள பிரயோக விஞ்ஞான பீடத்தின் கல்வி நடவடிக்கைகள் வழமைபோன்று இடம்பெறும் என்று மேலும் தெரிவித்தார்.
ஊடக பிரிவு
தென்கிழக்கு பல்கலைக்கழகம்.

BE INFORMED WHEREVER YOU ARE
எங்கிருந்தாலும் உடனுக்குடன்
කොතැන සිටියත් ඔබ දැනුවත්

Related posts

கொள்கையே இல்லாமல் அரசியல் நடத்துவது கோமாளித்தனமாகும் – அமைச்சர் ஜீவன் தொண்டமான்.

இலங்கைக்கு உலக வங்கியிடமிருந்து 150 மில்லியன் டொலர் நிதியுதவி!

கொரோனாவிலிருந்து குணமடைந்தோர் எண்ணிக்கை உயர்வு