சூடான செய்திகள் 1

“மர்ஹூம் ரஹ்மானின் நல்ல சிந்தனைகளை இறைவன் பொருந்திக்கொள்ள பிரார்த்திக்கிறேன்” -மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன்

(UTV|COLOMBO)-கல்முனை மாநகர சபை முன்னாள் உறுப்பினரும் பொலிஸ் அதிகாரியுமான (ஐ.பி) மருதமுனை ரஹ்மானின் திடீர் மறைவு, தன்னை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

அன்னாரின் மறைவு குறித்து அவர் தெரிவித்ததாவது,
மர்ஹும் ரஹ்மான் பொலிஸ் சேவையில் பணியாற்றிய காலங்கள் அவரின் தொழிற்திறமை, சமூக விசுவாசங்களை மக்களால் புரிந்துகொள்ள முடிந்தது. யுத்த காலத்தில் எதிரிகளின் தாக்குதலிலிருந்து தன்னுடன் பயணித்த பொலிஸ் குழாத்தினரைப் பாதுகாப்பாக மீட்டெடுக்க ரஹ்மான் கையாண்ட யுக்திகளை அவரைப் பதவி உயர்த்தியது.

எமது கட்சியுடன் இணைந்து பணியாற்றிய காலங்களிலும் அவரது சமூகசேவை உணர்வுகளையும் மனித நேயத்தையும் தன்னால் கண்டுகொள்ள முடிந்ததாகவும் அன்னாரின் நல்ல சிந்தனைகளை அல்லாஹ் பொருந்திக்கொள்ளப் பிரார்த்திப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

-ஊடகப்பிரிவு-

 

 

 

 

Related posts

விசாக நோன்மதி தினத்தை முன்னிட்டு விசேட ரயில் சேவை

மேலும் ஒருவருக்கு கொரோனா வைரஸ் –மொத்தம் 219 பேர் அடையாளம்

உயர்தரப் பரீட்சையின் தரச் சான்றிதழ்கள் இன்று முதல்