உள்நாடு

மரமொன்று முறிந்து வீழ்ந்ததில் 2 பெண்கள் உயிரிழப்பு

(UTV | கொழும்பு) – பலாங்கொடை – பின்னவல வலவத்த தோட்டத்தில் மரம் முறிந்து வீழ்ந்தமையினால் இருவர் உயிரிழந்துள்ளனர்.

இந்த சம்பவத்தில் மேலும் இருவர் காயமடைந்த நிலையில் பலாங்கொடை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வலவத்த தோட்டத்தைச் சேர்ந்த இரு தொழிலாளர்கள் கொழுந்து பறிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த வேளையில், இவ்வாறு மரம் முறிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

இந்த நிலையில், இந்த சம்பவம் தொடர்பில் பின்னவல பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 

Related posts

IMF ஒப்பந்தம இப்போதைக்கு அவசியம் இல்லை

சீதா யானை சுடப்பட்டமை தொடர்பில் உள்ளக விசாரணை!

மசகு எண்ணெய் விலையில் வீழ்ச்சி