உலகம்

மரக்கட்டிடம் எரிந்து 11 பேர் பலி

(UTV| கொழும்பு) – ர‌ஷ்யாவின் பிரிச்சுலிம்ஸ்கி கிராமத்தில் மரக்கட்டிடம் திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

அந்த கட்டிடம் முழுவதும் மரத்தினாலேயே கட்டப்பட்டு இருந்ததால், தீ வேகமாக பரவியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீயணைப்பு வீரர்களின் நீண்டநேர முயற்சிக்கு பின்னர் அங்கிருந்து 2 பேரை மட்டுமே உயிருடன் காப்பாற்ற முடிந்தது. 11 பேர் தீயில் உடல் கருகி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த தீவிபத்துக்கான காரணம் உடனடியாக தெரியவில்லை என்றும் யாரேனும் அந்த கட்டிடத்துக்கு தீ வைத்து இருக்கலாம் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றன.

Related posts

ஸ்பெயின் பிரதமரின் மனைவிக்கு கொரோனா வைரஸ்

மின்சாரத்தை பயன்படுத்த கட்டுப்பாடு

அமெரிக்கர்கள் அனைவருக்கும் ஜூலைக்குள் தடுப்பூசி