உள்நாடுபிராந்தியம்

மன்னார் துப்பாக்கிச்சூடு சம்பவம் – மேலும் ஒருவர் கைது

கடந்த சில தினங்களுக்கு முன்னர் மன்னார் நீதிமன்றத்திற்கு முன்பாக நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்தனர்.

இந்த துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சந்தேகநபர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (02) யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளார்.

மன்னார் நொச்சிக்குளம் பகுதியைச் சேர்ந்த 29 வயதுடைய குறித்த சந்தேகநபர் யாழ்ப்பாணம் – பெரியவிளான் பகுதியில் வசிப்பவர் ஆவார்.

இந்நிலையில் விசேட அதிரடிப் படை மற்றும் யாழ்ப்பாண பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டு மன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.

Related posts

சுகாதாரத்துறைக்கு அதிரடி சட்டங்களை விதித்து ஜனாதிபதி உத்தரவு!

நாடளாவிய ரீதியாக பலத்த மழை

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தவிசாளர் முழக்கம் மஜீத் காலமானார்.

editor