சூடான செய்திகள் 1

மன்னார் காவல்துறை விளையாட்டு வீரர்களுக்கான விளையாட்டு உபகரணங்கள் கையளிப்பு!!!

(UTV|COLOMBO)-அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரிஷாட் பதியுதீனின் வழிகாட்டலில், வடமாகாண சபை முன்னாள் உறுப்பினர் றிப்கான் பதியுதீனின் நிதியுதவியில் மன்னார் பொலிஸ் நிலைய விளையாட்டு வீரர்களுக்கான கிரிக்கெட் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு இன்று(04) இடம்பெற்றது.

இந்நிகழ்வில் மன்னார் பொலிஸ் நிலைய உதவி பொறுப்பதிகாரியும் சிறு குற்றப்பிரிவு பொறுப்பதிகாரியுமான உதான மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்ற வன்னி மாவட்டப் பணிப்பாளர் முனவ்வர் உட்பட பலரும் கலந்து சிறப்பித்தனர்

அத்துடன், இவ்வாறான சேவைகளைத் தொடர்ந்து செய்யும் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் றிப்கான் பதியுதீன் ஆகியோருக்கு மன்னார் பொலிஸ் நிலையம் சார்பில் அதிகாரிகள் நன்றியைத் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

-ஊடகப்பிரிவு-

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

இராஜாங்க அமைச்சர் கீதா குமாரசிங்க சஜித்துக்கு ஆதரவு

editor

SLIIT,MSc கற்கைநெறிக்கான உள்வாங்கல்கள் தற்போது

இலத்திரனியல் அடையாள அட்டை (e-NIC) திட்டம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி

editor