மன்னர் சல்மானிடமிருந்து 50 தொன் பேரீச்சம்பழங்கள் அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கான சவூதி தூதுவர் காலித் பின் ஹமூத் அல்கஹ்தானி முன்னிலையில் அவை முறையாக இலங்கையிடம் கையளிக்கப்பட்டது.
கலாநிதி ஹினிதும சுனில் செனவி பாராளுமன்ற உறுப்பினர்கள், அரச அதிகாரிகள், மன்னர் சல்மான் மனிதாபிமான உதவி, நிவாரண மையத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.