கிசு கிசு

மனைவியின் சம்பளத்தில் வாழ்க்கை நடத்தும் SB

(UTV | கொழும்பு) – கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு ஆளும் எதிர்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களது சம்பளத்தை வழங்கினாலும் தன்னால் அப்படி வழங்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தனக்கு 300 மில்லியன் ரூபா கடன் இருப்பதாகவும், மனைவியின் சம்பளத்தில் வாழ்க்கை நடத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது விவசாயம் செய்தே வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்வதாக எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,கொரோனா ஒழிப்பு நிதியத்திற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் தங்களது மாத சம்பளத்தை வழங்க இணக்கம் தெரிவித்து வரும் நிலையில்,சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

Related posts

ஒலிம்பிக்கை தாக்கியது கொரோனா

முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவி நீக்கம் செய்தமை ஒரு அரசியல் சூழ்ச்சியே?

அனுஷ்காவுடன் இருக்கும் இந்த ஆண் யார்?