வகைப்படுத்தப்படாத

மத நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

(UDHAYAM, COLOMBO) – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன அனுராதபுரம் ஸ்ரீசரனாந்த மகா பிரிவேனா நிலையத்தில் இடம்பெற்ற மத நிகழ்வில் நேற்று கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில் நேற்று கலந்துகொண்டு வழிபாடுகளின் பின் இராஜாங்க அமைச்சர் ஸ்ரீசரனாந்த மகா பிரிவேனா நிலையத்தின் பிரதம விகாராதிபதி வணக்கத்திற்குரிய கிரபே ஆனந்த தேரரை சந்தித்து ஆசீர்வாதம் மற்றும் அறிவுரைகளையும் பெற்றுக்கொண்டார்.

இந்த விஜயத்தின்போது, பண்டுலகம ஸ்ரீ கல்மிலவ தகாம் பாடசாலையில் புத்தர் சிலையை இராஜாங்க அமைச்சர் திரை நீக்கம் செய்து வைத்தார்.

Related posts

உயிரிழந்த விமானப்படை வீரருக்கு பதவிஉயர்வு

தொடருந்தில் மோதி ஒருவர் பலி

விக்கியின் வெளிநடப்புக்கு காரணம் இதுதான்!!