வகைப்படுத்தப்படாத

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலை

(UDHAYAM, COLOMBO) – மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன மகேந்திரன் இன்று மத்திய வங்கியின் முறி விநியோகம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ளும் ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார்.

சர்ச்சைக்குரிய மத்திய வங்கியின் முறி விநியோகம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காகவே அவர் இன்று அங்கு முன்னிலையாகியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இது தொடர்பில் அவருக்கு கடந்த 8 ஆம் திகதி அறிக்கவிக்கப்பட்டிருந்தது.

இதன்பின்னர் ஜனாதிபதி ஆணைக்குழுவில் மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் மற்றும் அதிகாரிகள் உட்பட்ட சிலர் வாக்குமூலங்களை பதிவு செய்திருந்தனர்.

இதேவேளை, நேற்றைய தினம் வாக்குமூலம் வழங்குவதற்காக மகிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர் பந்துள குணவர்தன ஆணைக்குழுவில் முன்னிலையாகியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts

2017 அரச இலக்கிய விருது

தைவான் பாராளுமன்றம் ஓரின ஈர்ப்பாளர்கள் திருமணத்தை அங்கீகரித்துள்ளது

காட்டு யானை தாக்கி நபரொருவர் பலி