சூடான செய்திகள் 1

மதங்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(UTV|COLOMBO) இனவாதம் அல்லது மதங்களிடையே அமைதியின்மையை ஏற்படுத்தும் அல்லது அவர்களின் செயற்பாடுகள் தொடர்பிலான கருத்துக்கள், நிழற்படங்களை வெளியிடுதல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக தராரம் பாராது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

அவசரகால சட்டத்தின் கீழ், குறித்த நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

உண்மைக்குப் புறம்பான மற்றும் வதந்திகளைப் பரப்புவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் சுமித் அத்தபத்துவின் கையொப்பத்துடன் வௌியாகியுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

Related posts

சூடுபிடிக்கும் கல்முனை பிரதேச செயலக விவகாரம் : ஜூன் 07 நீதிமன்றில் மீண்டும் விசாரணைக்கு வருகிறது வழக்கு

உயர்தரப் பரீட்சையின் இரண்டாம்கட்ட விடைத்தாள் மதிப்பீட்டுப் பணிகள் ஆரம்பம்

நிதி நிறுவனமொன்றில் 18 இலட்சம் ரூபாய் கொள்ளை