சூடான செய்திகள் 1

மண்சரிவு காரணமாக 59 பேர் இடம்பெயர்வு

(UTVNEWS|COLOMBO) – சீரற்ற காலநிலை காரணமாக நோர்வூட், நிவ்வெளிகம தோட்டத்தில் மண்சரிவு ஏற்பட்டமையினால் 12 குடும்பங்களை சேர்ந்த 59 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

அம்பகமுவ பிரதேச சபைக்கு உட்பட்ட கினிகத்தேன நகரில் இரண்டு வர்த்தக நிலையங்கள் மண்சரிவினால் பாதிக்கபட்டுள்ளதோடு, மேலும் 5 வர்த்தக நிலையங்களுக்கு மண்சரிவு அபாயம் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிலையத்தினால் அறிவிக்கபட்டுள்ளது.

இதேவேளை, வட்டவலை பகுதியில் பெய்த கடும் மலையின் காரணமாக வீடுகள் பல வெள்ள நீரில் மூழ்கியுள்ளமையால் நூற்றுக்கும் மேற்பட்டோர் இடம்பெயர்ந்து பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கபட்டள்ளனர்.

ஹட்டன் – நுவரெலியா பிரதான வீதியிலும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதோடு, மலையகத்தில் உள்ள நீர்தேக்கங்களின் நீர் மட்டமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

தலவாக்கலை டெவன்போல், சென்கிளயார், மஸ்கெலியா மோகினி எல்லை ஆகிய நீர் வீழ்ச்சிகளின் நீர் மட்டமும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

நாளை 24 மணி நேர நீர் வெட்டு…

பொலிஸாரின் விடுமுறைகள் காலவரையின்றி இரத்து

அவசர கால சட்ட வர்த்தமானி ஜனாதிபதியால் வௌியிடப்பட்டது