சூடான செய்திகள் 1

மட்டக்குளி சேர் ராசிக் மகளிர் கல்லூரியில் மூன்று மாடிக்கட்டிட திறப்புவிழா

(UTV|COLOMBO) அகில இலங்கை மக்கள் காங்கிரசின் மேல் மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே.எம் . பாயிஸின் வேண்டுகோளிற்கிணங்க முதலமைச்சரின் நிதியில் மட்டக்குளியில் அமைந்துள்ள சேர் ராசிக் பரீட் முஸ்லிம் மகளிர் கல்லூரியில் மூன்று மாடிகளில் அமைக்கப்பட்டுள்ள எம். எச். எம்.அஷ்ரப் ஞாபகார்த்த கட்டிடத்தின் திறப்பு விழா இன்று காலை (14) அதிபர் நூர் நளீபா சலீம் தலைமையில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராக அமைச்சர் ரிஷாட் பதியுதீனும் சிறப்பதிதிகளாக மேல் மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய, முஜிபுர் ரஹ்மான் எம்.பி , மேல் மாகாண சபை உறுப்பினர் பாயிஸ் , முஸ்லிம் காங்கிரசின் தேசிய அமைப்பாளர் சபிக் ரஜாப்தீன் உட்பட கொழும்பு வலய கல்விப்பணிப்பாளர், கல்வி அதிகாரிகள் பெற்றோர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

 

 

 

 

Related posts

கொழும்பு உள்ளிட்ட சில பிரதேசங்களுக்கு 18 மணி நேர நீர் வெட்டு

தொடரும் சுங்க அதிகாரிகளின் தொழிற்சங்க போராட்டம்

தபால்மா அதிபர் – பந்துல குணவர்தன இன்று விசேட கலந்துரையாடல்