உள்நாடு

மட்டக்களப்பு சிறைச்சாலையில் 162 கைதிகள் விடுதலை

(UTV|மட்டக்களப்பு) – மட்டக்களப்பு சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தவர்களில் சிறு குற்றங்களை புரிந்தமைக்காக தடுத்து வைக்கப்பட்டிருந்த 162 பேர் நேற்றைய தினம் விடுவிக்கப்பட்டுள்ளனர் என மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் எஸ்.எல்.விஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையின் பிரகாரம் சிறைச்சாலை அத்தியட்சகர் சகல நீதிமன்றங்களுக்கும் விடுத்த அறிவித்தலை தொடர்ந்து சிறு குற்றம் புரிந்த கைதிகளை பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய சம்மாந்துறையைச் சேர்ந்த 21 பேரும், பொத்துவில் பிரதேசத்தைச் சேர்ந்த 5 பேரும், கல்முனையைச் சேர்ந்த 12 பேரும், மட்டக்களப்பைச் சேர்ந் 44 பேரும், ஏறாவூரைச் சேர்ந்த 39 பேரும், விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

கட்சி பேதமின்றி அனைவரும் ஒன்றிணைய வேண்டும் – வியாழேந்திரன்

கஞ்சி பானை இம்ரானுக்கு தமிழக D.G.P எச்சரிக்கை!

ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டது