வகைப்படுத்தப்படாத

மங்கள சமரவீரவின் அறிவித்தலை இரத்து செய்வதாக ஜனாதிபதி அறிவிப்பு

(UTV|COLOMBO)-மதுபானசாலைகள் மற்றும் மதுபான விற்பனை தொடர்பில் நிதியமைச்சு அண்மையில் வௌியிட்ட திருத்தங்களை இரத்து செய்வதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

உள்நாட்டு மதுபானங்கள் மற்றும் வௌிநாட்டு மதுபானங்களை விற்பனை செய்யும் நிலையங்களை வர்த்தகத்திற்காக திறந்து வைக்கும் காலம் கடந்த வியாழக்கிழமை முதல் திருத்தியமைக்கப்பட்டுள்ளதாக நிதியமைச்சு கூறியது.

அதன்படி இனிமேல் மதுபானசாலைகளை காலை 08.00 மணி முதல் இரவு 10.00 மணிவரை திறந்திருக்க முடியும் என்று நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் கையொப்பமிடப்பட்ட அறிவித்தல் வௌியாகியது.

அத்துடன் மதுபான தயாரிப்பு மற்றும் விற்பனை நிலையங்களில் பெண்களை பணிக்கு அமர்த்துவது மற்றும் பெண்களுக்கு மதுபானங்களை விற்பனை செய்வது போன்றவற்றுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்குவதாகவும் நிதியமைச்சு கூறியது.

எவ்வாறாயினும் அகலவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய ஜனாதிபதி, இந்த புதிய சுற்றுநிரூபத்தை நாளை முதல் அமுலாகும் வகையில் இரத்து செய்வதாக கூறியுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

ஊடகவியலாளரை கொலை செய்தவருக்கு மரண தண்டனை

බිමත් රියදුරන් 219 දෙනෙකු අත්අඩංගුවට

Twenty five year old sentenced to death over drugs