அரசியல்உள்நாடு

மக்களை ஏமாற்றி ஆட்சியைக் கைப்பற்றியதைத் தவிர வேறு எதனையும் செய்யவில்லை – திஸ்ஸ அத்தநாயக்க

தேர்தலுக்கு முன்னர் வழங்கிய வாக்குறுதிகள் எவையும் நிறைவேற்றப்படாமையால் அரசாங்கத்தின் மீது மக்கள் கடும் அதிருப்தியிலிருக்கின்றனர்.

மக்களை ஏமாற்றி ஆட்சியைக் கைப்பற்றியதைத் தவிர இந்த அரசாங்கம் வேறு எதனையும் செய்யவில்லை.

எனவே அதனை ஏற்றுக் கொண்டு அரசாங்கம் மக்களிடம் மன்னிப்பு கோர வேண்டும் என்று ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.

எரிபொருள் விலை, மின்சாரக் கட்டணம் மற்றும் பொருட்களின் விலைகள் என அனைத்தையும் குறைப்பதாக தேர்தலுக்கு முன்னர் வாக்குறுதியளிக்கப்பட்டது.

ஆனால் அவை தற்போது வரை நிறைவேற்றப்படாமையால் மக்கள் அரசாங்கத்தின் மீது கடும் அதிருப்தியிலிருக்கின்றனர்.

மக்களை ஏமாற்றி ஆட்சியைக் கைப்பற்றியதைத் தவிர இந்த அரசாங்கம் வேறு எதனையும் செய்யவில்லை என்றார்.

கண்டியில் வியாழக்கிழமை இன்று (16) ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய அமைப்பாளர் திஸ்ஸ அத்தநாயக்க மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Related posts

ரஷ்யாவின் ஸ்புட்னிக் ஏப்ரல் மாத இறுதிக்குள்

இலங்கைக்கு வரவுள்ள சீன ஆராய்ச்சி கப்பல்!

சுயேச்சை கட்சி ஒன்றியத்தின் ‘பதில் கூட்டணி’ இன்று உதயமாகிறது