உள்நாடு

மக்களுக்கு நிவாரணம் வழங்கவும், பொது சேவைகளை பராமரிக்கவும் ரூ. 695 பில்லியன் துணை மதிப்பீடு

(UTV | கொழும்பு) – அத்தியாவசியமான அரச சேவையை இடையூறு இன்றி தொடர்ந்தும் முன்னெடுப்பதற்கு தேவையான நிதியை வழங்குவதற்கான குறைமதிப்பீட்டு மதிப்பீட்டை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி, தேசிய வரவு செலவுத் திணைக்களத்தின் வரவு செலவுத் திட்ட ஆதரவு சேவைகள் மற்றும் அவசரகாலப் பொறுப்புத் திட்டங்களின் கீழ் 695 பில்லியன் ரூபாய்கள் தேவையான ஒதுக்கீடு செய்யப்படும்.

இது தொடர்பான யோசனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

2022 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் சமுர்த்தி பெறுபவர்கள், தோட்டத் தொழிலாளர்கள், ஓய்வு பெற்றவர்கள் மற்றும் அரச ஊழியர்களுக்கு பாதகமான பொருளாதார நிலைமைகள் காரணமாக பொது மக்கள் எதிர்நோக்கும் இன்னல்களைக் குறைப்பதற்காக அரசாங்கம் நிவாரணப் பொதியை அறிமுகப்படுத்தியது.

அதற்கும் இந்த துணை மதிப்பீட்டில் இருந்து நிதி ஒதுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

பரீட்சைக்குச் சென்ற மாணவன் பரிதாபமாக உயிரிழப்பு – நுரைச்சோலையில் சோகம்

editor

Xpress Pearl இனால் வாழ்வாதாரத்தை இழந்தவர்களுக்கும் கொடுப்பனவு

கொரோனாவிலிருந்து மேலும் 293 பேர் குணமடைந்தனர்