அரசியல்உள்நாடு

மகிழ்ச்சியுடன் ஆதரிப்போம் – நாளை வரை காத்திருங்கள் – மஹிந்த.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தீர்மானம் நாளை (29) எடுக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

கேள்வி – வேட்பாளரின் நிலை எப்படி உள்ளது?

பதில் – திங்கட்கிழமை முடிவு செய்வோம். திங்கட்கிழமை வரை காத்திருங்கள்.

கேள்வி –  தம்மிக்க பெரேராவை உங்களுடன் இருப்பதை பார்த்தோமே?

பதில் – ஒன்றாகவே அமர்ந்திருந்தோம். அவர் எமது எம்.பி. அல்லவா!

கேள்வி – ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவதாக ஜனாதிபதி காலியில் அறிவித்துள்ளாரே?

பதில் – ஆம் நல்லது தானே.

கேள்வி – அவர் ஆதரிக்கப்படுவாரா?

இல்லை… எங்கள் கட்சியில் இருந்து தெரிவு செய்யும் வேட்பாளரையே நாங்கள் ஆதரிப்போம். அதை எங்கள் கட்சிதான் தீர்மானிக்க வேண்டும். நான் எங்கள் கட்சி சொல்வதேயே கேட்கிறேன். அவரை ஆதரிக்கச் சொன்னால், மகிழ்ச்சியுடன் ஆதரிப்போம். ஆனால் அவருக்கு எதிராக வேறு யாராவது நிறுத்துவோம் என்று கட்சி கூறினால் அதற்கு சம்மதிப்போம் என்றார்.

Related posts

மின் மற்றும் நீர் குழாய் பிரச்சினைகளுக்கு உடனடி தீர்வு

சீராகும் களனிதிஸ்ஸ மின்னுற்பத்தி நிலையம்

மகளையும் மகளின் தோழியையும் பாலியல் துஷ்பிரயோகம் செய்த தந்தை கைது!