அரசியல்உள்நாடு

மகாநாயக்க தேரர்களைச் சந்தித்த இம்தியாஸ் பாகீர் மாக்கார்

ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய தவிசாளராக நியமிக்கப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் இன்று (15) செவ்வாய்கிழமை மல்வத்து மற்றும் அஸ்கிரி பீடங்களின் மகா நாயக்க தேரர்களை சந்தித்து சமகால விவகாரங்கள் குறித்து கலந்துரையாடினார்.

முதலில் மல்வத்து மகா விகாரைக்கு விஜயம் செய்து, மல்வத்து பீட மகா நாயக்க சங்கைக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கல மகா நாயக்க தேரரை சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

அதன் பின்னர் அஸ்கிரி மகா விகாரைக்கு விஜயம் செய்து அஸ்கிரி பீட மகாநாயக்க வரகாகொட ஸ்ரீ ஞானரதன தேரரை சந்தித்து கலந்துரையாடினார்.

இந்த சந்திப்புகளில் எதிர்க்கட்சியின் முன்னாள் பிரதம கொறடா லக்‌ஷ்மன் கிரியெல்ல, 2024 பொதுத் தேர்தலுக்கான ஐக்கிய மக்கள் சக்தியின் கண்டி மாவட்டத் தலைவர் திஸ்ஸ அத்தநாயக்க உள்ளிட்ட வேட்பாளர்கள் பலரும் கலந்து கொண்டார்.

Related posts

நாட்டிலுள்ள சகல பொருளாதார மத்திய நிலையங்களும் திறப்பு

மீண்டும் அதிகரிக்கும் ரூபாவின் பெறுமதி – டொலரின் பெறுமதியில் மாற்றம்!

“அஷ்ரப் நினைவு அருங்காட்சியகம்” அமைக்க ரணில் நிதி ஒதுக்கீடு!