உள்நாடுபிராந்தியம்

மகளிர் தினத்தை முன்னிட்டு சேவை நலன் கௌரவிப்பு – கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு!

சம்மாந்துறை மலையடிக்கிராமம் 04 யில் இயங்கிவரும் புலம்பெயர் தொழிலாளர் நலன்புரி சங்கம், மாதர் கிராம அபிவிருத்தி சங்கம், அல் மூமினா ஆடை உற்பத்தி சிறு கைத்தொழில் சங்கம் ஆகிய மூன்று சமூக அமைப்புக்களின் உறுப்பினர்களின் ஏற்பாட்டில் சம்மாந்துறை அஸ் ஸமா வித்தியாலயத்தின் அதிபர் ஏ.எல். அபூபக்கர் தலைமையில் பாடசாலை கோட்போர் கூடத்தில் இன்று (11) செவ்வாய்க்கிழமை மகளிர் தின நிகழ்வு நடைபெற்றது.

புலம்பெயர் தொழிலாளர் நலன்புரி சங்கம், மாதர் கிராம அபிவிருத்தி சங்கம், அல் மூமினா ஆடை உற்பத்தி சிறு கைத்தொழில் சங்கம் ஆகிய மூன்று சங்கங்களின் அங்கத்துவர்களினால் வி. டி. மூமினாவின் 16 வருட சமூக சேவையைப் பாராட்டி பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

மேலும், வறுமைக்கோட்டின் கீழ் காணப்படும் தெரிவுசெய்யப்பட்ட எட்டு பாடசாலை மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், சம்மாந்துறை பிரதேச செயலக வெளிநாட்டு வேலைவாய்ப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான எம்.ஐ. அஸ்ரப், நிலாந்தினி, ரோஷான், மாதர் கிராம அபிவிருத்தி சங்க உத்தியோகத்தர்களான ஏ. வினோதினி, எம்.ஏ. சனுஜா வேகம், மலையடிக்கிராமம் 04 பிரிவுக்கு உரிய அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எல். பஸ்மிறா, புலம்பெயர் தொழிலாளர் நலன்புரி சங்க தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

-சம்மாந்துறை தில்சாத் பர்வீஸ்

Related posts

ஜனவரி முதல் நாட்டுக்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 2 இலட்சத்தை கடந்தது

editor

பிரசார நடவடிக்கைகள் யாவும் இன்று நள்ளிரவுடன் நிறைவு

சூடுபிடிக்கும் அரசியல் – மஹிந்தவை சந்தித்த தம்மிக்க.