உள்நாடு

மகநெகும முன்னாள் அதிகாரிகள் இருவருக்கும் விளக்கமறியல்!

மகநெகும நிதியை குற்றவியல் ரீதியாகப் பயன்படுத்த உதவியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இரண்டு முன்னாள் அதிகாரிகளை அடுத்த மாதம் 3 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதிவான் நீதிமன்றம் இன்று (27) உத்தரவிட்டது.

பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினால் (FCID) கைது செய்யப்பட்ட மக நெகுமவின் முன்னாள் பிரதிப் பொது முகாமையாள் அபேசிங்க அதிகாரி மற்றும் முன்னாள் மேலதிக பொது முகாமையாளர் (நிதி) அனகி புரகே மைக்கல் ஆகிய இரு சந்தேக நபர்களையுமே விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

2012 மற்றும் 2015 க்கு இடையில் திட்டங்களுக்கு நிதியை பொய்யாக அங்கீகரிப்பதன் மூலம் அரசாங்க நிதியை குற்றவியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்துவதற்கு உதவியதாகவும் அதற்கு உடந்தையாக இருந்ததாகவும் கூறப்படும் சம்பவம் தொடர்பாக இவர்கள் கைது செய்யப்பட்டனர்.

Related posts

தனுஷ்கவுக்கு இனி கிரிக்கெட் தடை

ஆவணங்களை நீதிமன்றில் ஒப்படைக்குமாறு உத்தரவு

நிவாரண கொடுப்பனவுகள் தொடர்பிலான அறிக்கை