விளையாட்டு

தமது எதிர்ப்பார்ப்பை வெளிப்படுத்தினார் சமரி

(UTVNEWS | COLOMBO) –மகளிர் இரு­பது 20 உலகக் கிண்ண கிரிக்கெட் அரை இறு­தியில் விளை­யா­டு­வதே தங்­க­ளது எதி­ர்ப்­பார்ப்பு என இலங்கை மகளிர் அணித் தலைவி சமரி அத்­தப்­பத்து தெரி­வித்தார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இவ்வாறு தெரிவித்தார்,

சமரி அத்­தப்­பத்து தொடர்ந்து பேசு­கையில் ‘நாங்கள் நேர்­ம­றை­யாக விளை­யாட முயற்­சிக்­க­வுள்ளோம். அரை இறு­தி­களில் விளை­யா­டு­வதே எமது எதிர்­பார்ப்­பாகும்.

என்னைப் பொறுத்­த­மட்டில் நான் எப்­போதும் எனது வழ­மை­யான பாணி­யி­லேயே விளை­யா­டி­வ­ரு­கின்றேன். அத்­துடன் நேர்­மறை போக்­குடன் இயல்­பா­கவே விளை­யா­டுவேன். கடந்த கோடை­கா­லத்தில் அவுஸ்­தி­ரே­லி­யா­வுடன் நாங்கள் விளை­யா­டினோம்.

அவ்­வ­ணியைப் பற்­றியும் உலகின் அதி­சி­றந்த அணி­யாக எது அவர்­களை உயர்த்­து­கின்­றது என்­பது பற்­றியும் நாங்கள் நிறைய கற்­றுக்­கொண்டோம்”என்றார்.

எதிர்வரும் சனிக்­கி­ழமை  பேர்த் விளை­யாட்­ட­ரங்கில் இலங்கை அணி நியூ­ஸி­லாந்து அணியை சந்திக்கவுள்ளது.

 

 

 

Related posts

ஹிருனி விஜேரத்ன சாதனை

ரொஜர் பெடரருக்கு மீண்டும் முதல் இடம்

ஒரு ரன் வித்தியாசத்தில் சென்னை அணி தோல்வி…