சூடான செய்திகள் 1

போலி நாணயத் தாள்களை விற்பனை செய்ய முயற்சித்த சந்தேக நபர்கள் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-ஒரு மில்லியன் டொலர் என அச்சிடப்பட்ட 3 போலி நாணயத் தாள்களை விற்பனை செய்ய முயற்சித்த 18 பேரும் எதிர்வரும் 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
அவர்கள் நேற்று கண்டி நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்டபோது இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
கண்டி காவல்துறை ஊழல் ஒழிப்பு பிரிவினரால் குறித்த 18 பேரும் அம்பிட்டிய பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்டபோது, சந்தேக நபர்கள் வசமிருந்து, ஒரு மில்லியன் டொலர் என அச்சிடப்பட்ட மூன்று போலி நாணயத் தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

Related posts

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான அனுமதி அட்டைகள் அடுத்த வாரம் விநியோகம்

பரீட்சைகளின் போது முறையற்ற செயற்பாடுகள் குறித்து அறிவிக்க விசேட தொலைபேசி இலக்கங்கள்

சர்வதேச மகளிர் தினம் இன்று