உள்நாடு

போலி நாணயத்தாள் தொடர்பில் பொலிசார் விடுத்துள்ள அறிவுறுத்தல்

(UTV | கொழும்பு) –  பண்டிகைக் காலத்தில் போலி நாணயத்தாள்களின் பாவனை அதிகரிக்கக்கூடும் என்பதால், கொடுக்கல் வாங்கல்களின் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

இந்தக் காலப்பகுதியில் போலி நாணயத்தாள் அச்சிடுவது அதிகரிக்கக்கூடும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்தூவ குறிப்பிட்டார்.

இதனால் பொருள் கொள்வனவு மற்றும் பண கொடுக்கல் வாங்கலின் போது போலி நாணயத்தாள் குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related posts

கலந்துரையாடலை அடுத்து வேலை நிறுத்தத்தை கைவிட்ட சுங்க அதிகாரிகள்

பெர்பெர்சுவல் ட்ரெஷரீஸ் நிறுவன வியாபாரத்தின் இடைநிறுத்தம் நீடிப்பு

புனர்நிர்மாண பணிகள் காரணமாக ரயில் குறுக்கு வீதிக்கு பூட்டு